உள்நாடு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|கொழும்பு) – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைஎதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கினை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் குறித்த கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

தியாகங்கள் செய்வோம் எனக் கூறிய அமைச்சர்களின் தியாகங்கள் எங்கே?

CEYPETCO எரிபொருள் விலை அதிகரித்தால் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும்