வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்- 5 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ரிக்டர் அளவு கோலில் 6.3 அலகாக பதிவாகியிருந்தது. வடக்கு கோடபாட்டோ மாகாணத்தின் மகிலாலா நகரில் இருந்து தென்மேற்கில் 23 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 2 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலநடுக்கம் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தாக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நீண்ட நேரம் நில அதிர்வும் ஏற்பட்டதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்தன. சில பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்டுகின்றன.

Related posts

වැස්සේ අඩු වීමක්

Unemployed graduates tear-gassed

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுற்றிவளைப்பு இன்று முதல்