உள்நாடுசூடான செய்திகள் 1

பிறை தென்படவில்லை: வியாழக்கிழமை பெருநாள் என அறிவிப்பு

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின்
எந்தப் பகுதியிலும் தென்படவில்லை.
ஆகவே புனித ரமழானை 30 ஆக பூர்த்தி செய்து வியாழக்கிழமை (11) இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்.
( MRCA / ACJU / CGM )
நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் வியாழக்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது நாட்டின் எப்பிரதேசத்திலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே ரமழான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி நாளை மறுதினம் வியாழக்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானித்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது

Related posts

பிரதமர் மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி

வாகன விபத்தில் 04 பேர் உயிரிழப்பு

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!