உலகம்

பிரேசில் உட்பட 12 நாடுகளுக்கு பயண தடை

(UTV |  இஸ்லாமாபாத்) – பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய 12 நாடுகளுக்கு பயண தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடை நாளை(23) முதல் அடுத்த மாதம் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Related posts

400 பேருடன் பயணித்த கொங்கோ படகில் தீ – 50 பேர் பலி – 100 பேரை காணவில்லை

editor

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்