வகைப்படுத்தப்படாத

பிரேசிலில் கனமழை, வெள்ளத்துக்கு 9 பேர் உயிரிழப்பு

(UTV|BRAZIL) பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாத கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில் மட்டும் 31 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது.

இதனால் அந்த நகரம் வெள்ளக்காடாகி இருக்கிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. சாலைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

 

Related posts

England win Cricket World Cup

அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

මෙරටට පැමිණෙන චීන සංචාරකයින් සඳහා පහසුකම් ලබාදීමේ වැඩපිළිවෙලක්