உள்நாடு

பிரித்தானிய பெண்ணின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுத்த பெண் பொலிஸ் அதிகாரிகள்

நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண் ஒருவரின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணப்பை திம்பிரிகஸ்யாய வீதியில் விழுந்து கிடந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பெண் பொலிஸ் பரிசோதகர் யமுனா தம்மிகா குமாரி எதிரிசிங்க மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் சமன்மீ ஆகிய அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பணப்பையின் உரிமையாளரான வெளிநாட்டுப் பெண்மணியை பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு அழைத்து, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுமித்ர டி சில்வா அந்தப் பணப்பையை அவரிடம் ஒப்படைத்தார்.

அதில் இலங்கை நாணயம் 6,000 ரூபாயும், இலங்கை நாணயத்தில் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான யூரோ, அமெரிக்க டொலர், ஸ்டெர்லிங் பவுண்ட் போன்ற வெளிநாட்டு நாணயங்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

கிணற்றில் தவறி வீழ்ந்து இரண்டு வயது குழந்தை மரணம் – ஏறாவூரில் சோகம் | வீடியோ

editor