வகைப்படுத்தப்படாத

பிரிதானியாவின் அடுத்த பிரதமராக பொரிஸ் ஜோன்ஸன் தெரிவு

 

(UTVNEWS | COLOMBO) – பிரிட்டன் கன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்ஸன் அந்நாட்டின் அடுத்த பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட் 46, 656 வாக்குகள் பெற்ற நிலையில், பொரிஸ் ஜோன்சன் 92,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவர் முன்னாள் லண்டன் நகர மேயர் என்பதுடன் அன்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி ஹண்டை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.

இன்று 55 வயதான ஜோன்சனை, மகாராணி உத்தியோகபூர்வமாகப் பிரதமராக நியமிக்கவுள்ளார்.

ஜோன்ஸன் பிரெக்சிட் விவகாரத்தில் கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈராக் போராட்டம் – ஐக்கிய நாடுகள் கண்டனம்

Boeing warns it may stop 737 Max production

අධිකරණ හා බන්ධනාගාර ප්‍රතිසංස්කරණ අමාත්‍යාංශයේ නව ලේකම්තුමිය වැඩ භාර ගනී