உலகம்

பிரான்சில் திங்கள் முதல் ஊரடங்கை தளர்த்த தீர்மானம்

(UTV கொழும்பு)- கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டத்தை விலக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என பிரதமர் எட்வர்ட் பிலிப் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் பிரான்ஸ் நாடு சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

காசா போர் நிறுத்த திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணக்கம்

editor

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

ஜனாதிபதியின் கொலையை தொடரும் பதற்றமும்