சூடான செய்திகள் 1

பிரபல பாடகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பிரபல பாடகர் ரூகாந்த குணதிலகவை நேற்று முன்தினம் (23) இரவு தாக்கிய மோட்டார் வாகனத்திற்கு சேதம் விளைவித்ததாக தெரிவிக்கும் நபர் ஒருவர் இன்று(25) கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய, வில்வாசலவத்த பிரதேசத்தினைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற ரூகாந்த குணதிலக நேற்று முன்தினம்(23) இரவு இடம்பெற்ற போட்டியில் இருந்து நீங்கிய போட்டிதாரர் ஒருவரின் ஆதரவாளர் ஒருவராலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் கங்கொடவில நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

 

 

 

 

Related posts

அரச வெசாக் உற்சவம் இன்றும்(17)  நாளையும்(18) ரத்பத் ரஜமஹா விஹாரையில்

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று

ரணிலின் 2024 பட்ஜெட் வாக்களிப்பில் முஸ்லிம் MPகளின் நிலைப்பாடு!