விளையாட்டு

பிரபல டென்னிஸ் வீரர் கொரோனாவினால் பாதிப்பு

(UTV|கொழும்பு)-பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் டெமிட்ரோவ் பதிவிட்டுள்ளார். என்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும் கொரோனா பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள் என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். நான் இப்போது வீடு திரும்பி மீண்டு வருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

CSK அதிரடி வெற்றி பற்றி சில பிரபலங்களின் ட்விட்டர் கருத்துக்கள்

ரங்கனவின் பிரியாவிடை மற்றும் இடம் குறித்து ஹதுருசிங்கவிடம் இருந்து விசேட கருத்து…

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க் கொண்டு வெற்றியை ருசித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ்