உள்நாடுபிராந்தியம்

பிரதேச சமூர்த்தி சமுதாய சங்கத்தினால் கிராம சேவகருக்கான வரவேற்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு!

கடந்த ஏழு வருடங்கள் ஒன்பது மாதங்களாக கல்லரிச்சல்-03 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றிய ஏ.எல்.அப்துல் றசூலின் பிரியாவிடை நிகழ்வும், கல்லரிச்சல்-03ம் பிரிவுக்கு புதிய கிராம சேவகர் கே.எம்.றூஸானா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2025.07.27) பிரதேச சமூர்த்தி சமுதாய சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ஜௌபர் தலைமையில் கமு/சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்லரிச்சல்-03 பகுதியில் கிராம சேவகராக கடமையாற்றிய ஏ.எல்.அப்துல் றசூலுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு தெரிவான தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.நயீம் (ஆசிரியர்) ஆகியோரையும் வரவேற்று கௌரவிப்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு, கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய பாடசாலை அதிபர் யு.எல்.றபீக், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜௌபர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐ.ஜெஸீனா, சமூர்த்தி சமுதாய சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கை இடைநிறுத்தம்!

மற்றுமொரு பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது

இன்று முதல் Park & Ride பஸ் சேவை