உள்நாடுபிராந்தியம்

பிரதேச சபைத் தவிசாளர் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

தொடங்கொட பிரதேச சபைத் தவிசாளர் பயணித்த வாகனம் இன்று (02) காலை 9 மணியளவில் விபத்துக்குள்ளானது.

குறித்த கெப் வாகனம் நேபட பகுதியிலிருந்து கோவின்ன பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, முன்னால் வந்த டிப்பர் லொறியின் பின்புற பக்கவாட்டில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் கெப் வாகனத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் கெப் வாகனத்தை பிரதேச சபையின் தவிசாளர் செலுத்திச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் — மட்டக்களப்பில் போராட்டம்