வகைப்படுத்தப்படாத

பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய ஒப்புதல்

(UTV|COLOMBO)-வடகொரியாவில் உள்ள பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன,

தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று வடகொரியா சென்றடைந்த அவருக்கு தலைநகர் பியாங்யாங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தென் கொரியா ஜனாதிபதி, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமில்லா பிராந்தியமாக மாற்ற இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, யோங்பயான் பகுதியில் உள்ள பிரதான அணுஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டிருப்பதாக தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடகொரிய தலைவர் கூறியுள்ளார்.

மேலும், வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் ஏவுகணை சோதனை தளம் மற்றும் ஏவுதளத்தை வடகொரியா அழிக்கும் என்றும் இரு நாட்டின் தலைவர்களும் கூட்டாக தெரிவித்தனர்.

இந்த வருடம் தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வார் என்று தென் கொரிய ஜனாதிபதி கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜப்பானில் முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து

Two spill gates opened in Laxapana Reservoir

Showery and windy conditions to enhance until July 20