வகைப்படுத்தப்படாத

பிரதான 3 விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் யாப்பை வகுக்கும்போது பிரதான மூன்று விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர இளைஞர் முன்னிணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

அவர் இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,

ஒற்றை ஆட்சி நாடு என்ற எண்ணக்கரு இதில் முக்கிய இடம்பெறுவது அவசியமாகும்.

பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கி அதனை போசிப்பது அவசியமாகும். ஏனைய மதங்களை பின்பற்றுவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்குவதோடு, அதனை உறுதிப்படுத்துவதும் அவசியம் என்று சாந்த பண்டார கூறினார்.

தற்சமயம் அமுலில் உள்ள தேர்தல் முறைமைக்கு மாற்றமாக கலப்புத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Easter Sunday attacks: Rs 265 million in compensation paid so far

மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிடியாணை

ஜோசப் ஜாக்சன் மரணம்