அரசியல்உள்நாடு

பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி நீக்கப்படுவார் என எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன – ரில்வின் சில்வா

NPP அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சராகவும், பிரதமராகவும் ஹரிணி அமரசூரிய எவ்வித தவறும் செய்யவில்லை எனவும் JVP யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரசாரம் அடிப்படையற்றது என JVP யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கும் கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான விடயங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படும், இதன்போது, தவறு எங்கே நடந்தது என்பது கண்டறியப்படும்.

பிரதமரை பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன.

ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருப்பதால் அவரை குறிவைத்து எதிர்க்கட்சிகள் காய் நகர்த்துகின்றனர்.

பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி விலகுவதற்கு தயாராகி வருவதாக பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானது என்றும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆபத்தான நிலையில் உள்ள பாரிய கட்டடம்!

கல்விச் சீர்திருத்தம் என்பது ஒட்டுமொத்த கல்வி முறைமையும் மாற்றி அமைப்பதாகும் – பிரதமர் ஹரிணி

editor

ஜனாதிபதி அநுர தலைமையில் கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பான கலந்துரையாடல்

editor