உள்நாடு

“பிரதமர் பதவி விலகுவதே சிறந்தது, தீர்மானம் பிரதமர் கையில்”

(UTV | கொழும்பு) –   தற்போதைய அமைச்சரவை இராஜினாமா செய்துவிட்டு புதிய அமைச்சரவையை நியமிக்க எதிர்க்கட்சிகளை அழைக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் தெரிவித்ததாக அமைச்சர் நாலக கொடஹேவா நேற்று (08) தெரிவித்தார்.

அமைச்சரவை இராஜினாமா செய்தால் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மகா சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் என கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அவர் இராஜினாமா செய்தால் முழு அமைச்சரவையும் கலைக்கப்பட்டதாக கருதப்படும் என்பதால், பிரதமர் பதவி விலகுவதே சிறந்த தீர்வாக அமையும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி இன்று (09) அல்லது எதிர்காலத்தில் பிரதமரே இது குறித்து அறிவிப்பார் என கொடஹேவா தெரிவித்தார்.

Related posts

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

UPDATE: அக்கரைப்பற்றில் தீ பிடித்த படகு : தேடுதல் வேட்டை மும்முரம்