வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு புதுடில்லியில் வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜிங் சிங் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஷ்வர உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தில் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, மலிக் சமரவிக்ரம, மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அத்தாவுத ஹெட்டி ஆகியோர் இலங்கை தூதுக்குழுவில் பங்கேற்றுள்ளனர்.

Related posts

சொத்து தகராறில் பலியான உயிர்

Australian swimmer refuses to join rival on podium

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து விசேட அமைச்சரவை கூட்டம் தற்போது