சூடான செய்திகள் 1

UPDATE-தற்போதைய பிரதமருக்கு எதிரான மனு தற்சமயம் விசாரணை

(UTV|COLOMBO)-தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் தற்சமயம் மீண்டும் இடம்பெறுகின்றன.


தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இன்று மீண்டும் இடம்பெறவுள்ளன.

குறித்த மனு கடந்த 23 ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பம் இடப்பட்ட நிலையில், தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை, மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதிகள் குறித்த மனு மீதான விசாரணைகளை இன்றைய தினம் வரை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

UPDATE – நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி