உள்நாடு

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை ஏற்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பினை மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் புறக்கணிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

இன்றைய வானிலை (Weather Update)

அமெரிக்க தூதுவர், டில்வின் சில்வா சந்திப்பு.

editor