உள்நாடு

பிரதமரால் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம்

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியினை புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், ..” இலங்கை தற்போது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதனை நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம். நாளுக்கு நாள் வலுக்கும் இந்த நெருக்கடியினை முடிவுக்கு கொண்டு வரவும் பொருளாதார தீர்வொன்றுக்கும் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. இச்சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் நாளைய சமுதாயத்தினை காக்க பெரிதும் உதவுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவினை வழங்குமாறு தாழ்மையாக வேண்டுகிறேன்..” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்

வேட்பு மனு நிராகரிப்பு வழக்குகளில் வேறு கட்சிகளுக்காக முன்னிலையாக மாட்டேன் – சுமந்திரன்

editor

ஜனாதிபதி இன வேறுபாடின்றி நாட்டின் முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்றார்.- காரைதீவில் முஷாரப் எம்.பி.