உள்நாடுசூடான செய்திகள் 1

பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு

(UTV | கொழும்பு ) – பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று (02) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவது, வீடு வீடாகச் செல்வது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, விளம்பர பலகைகளைக் காண்பிப்பது, சுவரொட்டிகளைக் காண்பிப்பது, தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பிளாஸ்டிக், பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனைக்கு தடை

இலங்கையில் 187வது கொரோனா மரணம் பதிவு

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்