அரசியல்உள்நாடு

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர், தூதுவர் இந்திரமணி பாண்டே பிரதமரை சந்தித்தார்

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே பெப்ரவரி 6ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கையில் முன்னணிப் பங்கு வகித்த சுகாதாரச் சேவைகள், மனித வள அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த இந்தத் துறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை திரு.இந்திரமணி பாண்டே சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 6வது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிம்ஸ்டெக் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி ஏ. சாஜ் யு மெண்டிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் உதவி பணிப்பாளர் பிரார்த்தனா கௌஷலியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

ஜனாதிபதி அநுரவின் அதிரடியால் ஓய்வூதியத்தை இழந்த 85 முன்னாள் எம்பிக்கள்

editor

கலவரத்திற்கு காரணம் ‘நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்’ என கோசமிட்ட அடிப்படைவாதிகளே – PMD

போலி தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை