கேளிக்கை

பாவனா துணிந்து செய்த செயல்!!

(UDHAYAM, INDIA) – பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், கடும் மன வேதனைக்கு ஆளான நடிகை பாவனா, மன தைரியத்தால் அதிலிருந்து மீண்டு, படப்பிடிப்புக்கு திரும்பினார்.

நடிகை பாவனாவை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், அவரது காரை ஓட்டி வந்த மார்ட்டின், பாவனாவிடம் முன்பு ஒட்டுநராக வேலைபார்த்த பெரும்பாவூர் சுனில்குமார், வடிவால் சலீம், கண்ணூர் பிரதீப், மணிகண்டன், விஜேஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாவனாவுக்கு ஆதரவாக மலையாள திரையுலகம், தென்னிந்திய நடிகர் சங்கம், தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்தன. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு ஆறுதல் கூறியதோடு, துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

சம்பவம் நடந்து ஒரு வாரமான நிலையில், நடிகர் பிரிதிவிராஜ் ஜோடியாக பாவனா நடிக்கும் ஆதம் மலையாள திரைப்பட படப்பிடிப்பு, கொச்சி துறைமுகம் நடந்தது. இப்படப்பிடிப்பில் நடிகை பாவனா பங்கேற்றார்.

Related posts

பிரபல நடிகையின் படத்தில் தமன்னாவின் கிளாமரான ஆட்டம்…

‘நெற்றிக்கண்’ – விமர்சனம்

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா?