கிசு கிசு

பால் மா விலை அதிகரிக்கப்படுகிறது?

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலையை ரூ.300 இனால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருகிறது.

இதன்படி, 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை ரூ.120 இனால் அதிகரிக்கப்படும் என குறித்த சங்கத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5,500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பால் மாவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாகவும், இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலையை அநியாயமாக உயர்த்தினால், நுகர்வோருக்கு நியாயம் கிடைக்க தலையிடுவோம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்திருந்தார்.

Related posts

துமிந்தவின் விடுதலையும் வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகளும் [VIDEO]

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

இலங்கையில் சடுதியாக அதிகரித்த ‘பாலியல் தொழிற்றுறை’