உள்நாடு

பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம்

இன்று (16) இரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே, பால் தேநீர் விலையையும் இவ்வாறு குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் தெரிவித்தார்.

எனவே அனைத்து சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களும் தற்போது கிடைக்கப்பெறும் இந்த சலுகையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பொதியானது 125 ரூபாவினாலும், 400 கிராம் பொதியொன்றின் விலையை 50 ரூபாவினாலும் இன்று முதல் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

மாணவர் தலைமுறைக்கு பயனளிக்காத குறுகிய பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தத்தை நோக்கியே இந்த அரசாங்கம் நகர்கிறது – சஜித் பிரேமதாச

editor

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி