உள்நாடுபிராந்தியம்

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் கைது – இலங்கையில் சம்பவம்

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், ஆங்கிலத்தில் நன்கு படித்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட சிறுமியுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் மற்றும் சிறுமியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக மாத்தறை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்காக வற்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

அநுரவிற்கு அமெரிக்கா வாழ்த்து – இணைந்து செயற்பட தயார்

editor

ஜனாதிபதி அநுர நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – அஸாத் சாலி

editor

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான அறிவித்தல்