சூடான செய்திகள் 1

பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை

(UTVNEWS|COLOMBO) – கைது செய்யப்பட்ட பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும், ஒரு இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி மத்துகம, ஜேபட் பிரதேசத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள மயானத்தில் அடக்கம் செய்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்