அரசியல்உள்நாடு

பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி பங்கேற்பு.!

‘நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற நக்பா நினைவு தின நிகழ்வு, நேற்று (15) கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகம் மற்றும் பாலஸ்தீன பேரழிவை நினைவுகூரும் இலங்கை ஒருமைபாட்டுக் குழு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, பிரதி சபாநாயகக் வைத்தியர் றிஸ்வி சாலி கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-எஸ். சினீஸ் கான்

Related posts

கதைப் புத்தக அட்டையில் போதைப்பொருள்- கைதான பெண்.

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு வழங்கப்படும் டீசலின் அளவில் இரட்டிப்பு

தொடர்ந்தும் வலுக்கும் கொரொனா தொற்று