கிசு கிசு

பாராளுமன்றிற்கு 100 மில்லியன் ரூபா செலவில் மின்தூக்கிகள்?

(UTV|COLOMBO) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் புதிய மின்தூக்கிகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் நேற்று சபையில் வாசித்தார்.

இதற்கமைய, 100 மில்லியன் ரூபா செலவில் 10 புதிய மின்தூக்கிகளைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்தார்.

எனினும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வளவு வேகமாக செயற்படுகின்றனரா என்பதே மக்களின் கேள்வியாகும்.

 

 

 

 

Related posts

புர்கா, நிகாப் தடையிற்கு அலி சப்ரி ஏன் அவசரப்படுகிறார்? [VIDEO]

‘இலங்கை முற்றிலும் திவாலாகி விட்டது’

8,00,000 யூரோ பெறுமதிப்பான சவூதி இளவரசியின் நகை திருட்டு