சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

கடந்த 2018 நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் என்பன பரீசீலிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நியமனம்

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்