அரசியல்உள்நாடு

பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP எம்.பி யின் வாகனம்

தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் இன்று (26) மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவை மீண்டும் ஏற்றிச் செல்ல சாரதி வந்தபோதே இவ்வாறு தடாகத்திற்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

தமிழக முதலமைச்சரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

வசந்த முதலிகே 90 நாள் காவலில் வைக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் இலங்கைக்கு