அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் நேர்முகத் தேர்வு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேர்காணல் இன்று (05) அக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக மாத்திரமே புதிய கூட்டணிகள் உருவாக்கப்படும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் புதிய கூட்டணிகளை உருவாக்கும் எண்ணம் இல்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுத் தயாரிக்கும் பணிகள் இந்த நாட்களில் இடம்பெற்று வருவதுடன், எதிர்வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் வேட்புமனுக்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சவூதி அரேபியாவுக்கு செல்லும் அமைச்சர் விஜித ஹேரத்

editor

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய

editor

“சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு!