அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் பிரதமர் ஹரினி

இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரிய எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.

இதற்கிடையில் புதிய அரசாங்கத்துக்கு போட்டியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும் எந்த மாவட்டத்தில் அவர் போட்டியிடுகிறார் என்பது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Related posts

ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கும் கொலனி மக்கள்

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல்

பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

editor