சூடான செய்திகள் 1

பாராளுமன்ற சொத்து சேத மதிப்பீட்டு அறிக்கை விசாரணை குழுவுக்கு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் 12ம் திகதி முதற் தடவையாக கூடவுள்ளது.

இந்த அமைதியற்ற நிலை காரணமாக பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் சம்பந்தமான மதிப்பீட்டு அறிக்கை அன்றைய தினம் அந்தக் குழுவுக்கு சமர்பிக்கப்பட உள்ளது.

பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி தலைமையில் ஷமல் ராஜபக்ஷ, சந்திரசிறி கஜதீர, ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

 

 

 

 

Related posts

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேர அளவில் மாற்றம்

காலை – இரவிலும் குளிரான வானிலை

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்