மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியின் கழுமுந்தன்வெளி, காக்காச்சிவட்டை, மண்டூர் – 14 கணேசபுரம் ஆகிய கிராமங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோர் கிராம மக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக 17.01.2026 இன்றைய தினம் கள விஜயம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடாத்தியுள்ளனர்.
இச் சந்திப்பில் யானை – மனித மோதல் பிரச்சினை, சட்ட விரோத மண்ணகழ்வு, கிராம உள்ளக வீதிகள், வடிகான் சீரமைப்பு, புதிதாக வீதி மின்விளக்குகள் பொருத்துதல், பழுதடைந்த வீதி மின் விளக்குகளை சீர்செய்தல், விவசாய வீதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மக்களால் முன்வைக்கப்பட்டன.
மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் இவ் விடயங்கள் தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
-விஷ்ணு
