அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், ஜகத் விதானவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் ஜகத் விதானவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில் அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கும் நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர், முன்னதாக, பாதுகாப்புக்கோரி, காவல்துறைமா அதிபர் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதனிடையே, மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது சிறந்த ஒருவரை தெரிவு செய்தால் அவர்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி காவல்துறை பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Related posts

வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை

editor

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை

மூதூரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 15 வயது பேத்தி கைது

editor