முன்னாள் நிதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மேலும் சாட்சிய விசாரணைக்காக ஜனவரி 16 ஆம் திகதி அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முறைப்பாட்டுக்கான சான்றுகள் அங்கு பதிவு செய்யப்பட்டன.
பின்னர் நீதிபதி மேலும் சாட்சிய விசாரணைகளை ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
