சூடான செய்திகள் 1

பாரளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடுகிறது

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து, மீண்டும் இன்று பிற்பகல் 1.30க்கு கூடவுள்ளது.

நேற்று 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றத்தில் தமது அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதால், தற்போது பிரதமர் உள்ளிட்ட எந்தப் பதவிகளும் அமுலில் இல்லை என்று கூறினார்.

அனைவரும் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்று கூறினார்.

பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தமது உரையை நிகழ்த்தியதை அடுத்து, அவரது உரையில் நம்பிக்கையில்லை என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல, அதற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

இதுதொடர்பில் சபாநாயகர் சபையின் நிலைப்பாட்டைக் கோரிய போது, சபையில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சபாநாயகரின் ஆசனத்தை நெருங்க முற்பட்ட போது, ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சுற்றிவளைத்தனர்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதலும் பதிவாகி இருந்தது.

இதனை அடுத்து இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று பிற்பகல் 1.30 வரையில் சபையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை

வன்னி எம்.பிக்களை அவசரமாக அழைத்துள்ள ஜனாதிபதி அநுர

editor

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்