அரசியல்உள்நாடு

பாத்திமா நளீராவின் ‘ஏழாம் வானத்தின் சிறகுகள்’ கவிதை நூல் வெளியீடு – ரிஷாட் எம்.பி பங்கேற்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரின் மனைவி பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தலைமை தாங்கிய இந்நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன்,

அதிதிகளாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், ஜே பவுண்டேசன் நிறுவனரும் பணிப்பாளருமான கலாநிதி அல்ஹாஜ் ஐ. வை. எம். ஹனீப் , சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், மொஹமட் ஷிபான் உள்ளிட்டவர்களுடன் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

“பெற்றோர் மீது தேவையற்ற சுமை இல்லை” – கல்வி அமைச்சு

நாளை முதல் 16 -19 வயதானோருக்கு தடுப்பூசி

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு