உள்நாடு

பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்தார் புதிய பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் தனித்தனியாகச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவையும் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலர் பதவியேற்ற பிறகு சிரஷ்ட அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

Related posts

விஜயதாசவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு

வெள்ளியன்று மொடர்னா தடுப்பூசி டோஸ்கள்

ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம்!