சூடான செய்திகள் 1

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவன் தவறி குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.

சாவக்சேரி கல்வெளி முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதான ஜெயகுமாரன் தீஸன் என்று சிறுவனே உயிரிழந்துள்ளான்.

நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் நான்காவது பிள்ளையான தீஸன் சாதாரண தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் பட்டம் விளையாட வந்த சந்தர்ப்பத்திலேயே நேற்று இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த தீசனின் சடலம் பிரேத பரிசோனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

திரைப்படத்துறைக்காக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – சம்பளம் அதிகரிப்பு ?