விளையாட்டு

பாதியில் திரும்பிய மெத்தியூஸ்

(UTV | கொழும்பு) – மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் விளையாடிவரும் எஞ்சலோ மெத்தியூஸ் இன்று(12) நாடு திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு எஞ்சலோ மெத்தியூஸ் நாடு திரும்புவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் இருபதுக்கு – 20 தொடரை இழந்துள்ள நிலையில், 3 போட்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி

விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி