டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் Pragathi Lanka International தனியார் நிறுவனம் ஆகியவை இன்று (03) நிதி நன்கொடைகளை வழங்கின.
அதன்படி, Pragathi Lanka International தனியார் நிறுவனத்தின் தலைவர் டி. எம். ஆர். டி. திசாநாயக்க, 10 இலட்சம் ரூபாவுக்கான காசோலையையும், இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் ரோஹண டி சில்வா, 10 இலட்சம் ரூபாவையும் இன்று (03) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார்கள்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
