உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை!

பாணந்துறை ஹிரான பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார்.

மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த விருந்துபசாரத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று பொலிஸார். தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்ய ஹிரான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வலுக்கும் கொரோனா : 251 பேர் அடையாளம்

ஜனாதிபதி-பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு!

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’