உள்நாடுபிராந்தியம்

பாடசாலைக்கு அருகில் மாணவர்களை இலக்கு வைத்து மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி – மூன்று பெண்கள் கைது

களுத்துறை, பாணந்துறையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் அடங்குகின்றார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, மாத்தறை மற்றும் நிட்டம்புளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் 32 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களும் இந்த மசாஜ் நிலையத்துக்கு அடிக்கடி வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த மசாஜ் நிலையம் இயங்கி வந்துள்ளது என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

இலங்கையில் உள்ள ரஷ்ய – உக்ரைன் பிரஜைகளுக்கான விசா காலம் நீடிப்பு

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவம் – கைதான இலங்கையர்கள்.