கட்டுபொத்த பகுதியில் நேற்று (19) மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுபொத்த நகரத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றை சோதனை செய்ததில், சம்பந்தப்பட்ட சாரதி மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
ரதலியகொட, கட்டுபொத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சாரதி மதுபோதையில் பஸ்ஸை செலுத்திச் சென்றபோது, பஸ்ஸில் 16 மாணவர்களும் இரண்டு தாய்மார்களும் இருந்தனர்.
சம்பந்தப்பட்ட பஸ் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இன்று (20) நாரம்மல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.