உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது – 16 பேர் காயம்

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பேருந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் மோதி நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது, 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

கொழும்பு மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள்!

காஸா மக்களுக்கான நிதியத்திற்காக 25 லட்சங்களை வழங்கிய ரஸ்மின் MISc.!

அரச பணியாளர்களின் ஓய்வு வயது குறித்து புதிய சுற்றறிக்கை