உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியது!

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீண்டும் மன்னிப்பு கோரிய FB நிறுவனம்

கொரோனா : 172 பேர் சிக்கினர்

முகக்கவசம் இன்றேல் PCR பரிசோதனை