சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வோரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பொலிஸாருடன் இணைந்து விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் சம்மந்த குமார கித்தலவ ஆராச்சி இது தொடர்பாக தெரிவிக்கையில் பாடசாலையை பாதுகாக்கும் குழுக்களின் பங்களிப்பு இதற்காக பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.

இளம் வயதிற்கு உட்பட்டவர்கள் விடேமாக 6 ஆம் 7ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் கூடுதலாக ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் உண்டு. குறிப்பாக இந்த வகுப்புக்களில் உள்ள மாணவர்கள் அனைவரும் இதில் ஈடுபடுவார்கள் என்று கூற முடியாது.

இவர்களை இதில் உள்வாங்குவதற்கு சிலர் முயற்சிப்பார்கள். இவ்வாறான மாணவர்களையே இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு பொலிஸார் மூலோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

Related posts

இரு பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: வீடியோ தொடர்பாடல் மூலம் விசாரணை

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…

ஜனாதிபதிக்கு, இன்டர்போல் செயலாளர் பாராட்டு