உலகம்

பாகிஸ்தான் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் டார் பங்களாதேஷ் விஜயம்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் டார் நேற்று முன்தினம் பங்களாதேசத்திற்கு விஜயம் செயதுள்ளார்.

கடந்த 13 வருட காலப்பகுதியில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் பங்களாதேசத்திற்கு விஜயம் செய்திருப்பது இது முதன் முறையாகும்.

பங்களாதேசத்தில் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதோடு அரசாங்கமும் கவிழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து பங்களாதேசத்தில் பதவிக்கு வந்துள்ள ஆட்சியாளர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் டாக்காவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது அந்நாட்டின் வெளிவிவகார ஆலோசகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடனும் அவர் சந்திப்புக்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-அல் ஜசீரா

Related posts

தென்கிழக்காசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

அரபு நாடுகளே கண் திறவுங்கள் – பாலஸ்தீன அரசியல்வாதி .

உணவுக்காக குழந்தைகளை விற்கும் அவலம்